சபாநாயகர் அப்பாவு மீது நில அபகரிப்பு வழக்கு

0
189

சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கு எம்பி எம்எல்ஏக்கள் கோர்ட்டுக்கு மாற்றம் ! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! தமிழக சட்டப்பேரவை தலைவராக இருப்பவர் அப்பாவு, இவர் மீது நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் தாமோதரன் என்பவர் ரூ.80 இலட்சம் மதிப்புடைய தனது நிலத்தை அபகரித்து விட்டதாக புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த புகாரை விசாரித்த நெல்லை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் சபாநாயகர் அப்பாவு மீது வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.

இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சபாநாயகர் அப்பாவு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார், இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதியரசர் இளங்கோவன் தலைமையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் செல்வம் இந்த வழக்கில் குற்றவாளியான அப்பாவு தற்போது தமிழக சட்டப்பேரவைத் தலைவராகவும் ராதாபுரம் தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பதால் இந்த வழக்கை எம்பி எம்எல்ஏக்கள் மீதான நீதிமன்றம்தான் விசாரிக்க முடியும் என்று வாதிட்டார்.

அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு மீதான நிலமோசடி தொடர்பான இந்த வழக்கை எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை அனுப்பும்படி நீதியரசர இளங்கோவன் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்