சிலி அதிபர் தேர்தலில் இடதுசாரி இளம் வேட்பாளர் வெற்றி

0
157

சிலி அதிபர் தேர்தலில் இடதுசாரி இளம் வேட்பாளர் வெற்றி மீண்டும் உலகெங்கும் சிவக்க ஆரம்பிக்கிறது இடதுசாரிகளின் செங்கொடி. இடதுசாரி வேட்பாளரான கேப்ரியல் போரிக் சிலி நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் இடதுசாரிக் கூட்டமைப்பின் சார்பில் கேப்ரியல் போரிக்கும், குடியரசுக் கட்சியின் ஜோஸ் அண்டோனியோவும் போட்டியிட்டனர்.
இதில் இடதுசாரி கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட 35 வயதான கேப்ரியல் போரிக் பதிவான மொத்த வாக்குகளில் 55.87 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோஸ் அண்டோனியோ 44.13 சதவிகித வாக்குகள் பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் சிலி நாட்டை மீண்டும் இடதுசாரிகள் கைப்பற்றியுள்ளனர். சிலியில் மொத்த மக்கள்தொகையில் 1 சதவிகிதத்தினரிடம் 25 சதவிகித சொத்துக்கள் உள்ளன. தேர்தலில் இதனை மையமாகக் கொண்ட கேப்ரியல் போரிக் பிரசாரம் பலத்த அவருக்கு ஆதரவைப் பெற்றுத் தந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் வாரத்தில் 40 முதல் 45 மணி நேரம் மட்டுமே வேலை, சூழலியல் முதலீடுகள், ஓய்வூதிய அறிவிப்புகள் உள்ளிட்டவை கேப்ரியல் வெற்றிக்கு வலுசேர்த்துள்ளன. லத்தீன் அமெரிக்க நாடுகளான கியூபா, வெனிசுலா, ஹோண்டுராஸைத் தொடர்ந்து சிலியிலும் இடதுசாரிகள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்