நெல்லை ஆனைகுளத்தில் உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு ?

0
147

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே ஆனைகுளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட தெருவுக்குள் செல்லும் முக்கியமான சாலையில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள், சிறுவர்கள், பள்ளி மாணவ-மாணவியர்கள் செல்ல முடியாமல் தண்ணீரில் தத்தளித்து சென்று வருகின்றனர் .

இது குறித்து ஊர்பொதுமக்கள் பஞ்சாயத்து மற்றும் வள்ளியூர் யூனியன் அலுவலகங்களில் பலமுறை மனு கொடுக்கப்பட்டும், இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . ஆகையால் சாலைகள் சீரமைக்கபடாவிட்டால் வரும் உள்ளாட்சி தேர்தலில் வாக்குகள் பதிவுசெய்யாமல் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்