நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை

0
171

திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் சம்மந்தமாக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது

கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளருமான ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் பணி பொறுப்பாளர்கள் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி .ஆர்.மனோகரன் ,நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சங்கரபாண்டியன்,கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயகுமார் ஆகியோரும் கூட்டத்தில் ஆலோசனைகளை வழங்கினர்.

கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தோழமை கட்சி வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது என தீர்மானிக்கப்பட்டது

கூட்டத்தில் காங்கிரஸ் மாநில, மாவட்ட, மாநகர, வட்டார,மண்டல மற்றும் பிற அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு சிறபித்தனர்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கட்சி நிர்வாகிகள் விருப்ப மனுவை தேர்தல் பொறுப்பாளர்களிடம் அளித்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்