நெல்லையில் களைகட்டும் உள்ளாட்சி தேர்தல்

0
200

உள்ளாட்சி தேர்தல் மிகவும் சூடு பிடிக்கின்றது, அனைத்துகட்சிகளுக்குள்ளும் ஒன்றிய கவுன்சிலர் ,மாவட்டக்கவுன்சிலர் சீட் யாருக்கு கொடுப்பது என்பதில் குழப்பம் இருக்கின்றது, எனெனில் இந்த இரு பொறுப்புகளுக்குதான் கட்சி சின்னம் ஒதுக்கப்படும்.

உண்மையாக உழைப்பவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்று மிகவும் வருத்தத்துடன் உள்ளனர் கட்சியில் சீட் கேட்டவர்கள் ,இதே நிலை அனைத்துக் கட்சிகளிலும் தொடர்கிறது.நேர்காணலும் இன்னும் நடந்து வருகின்றது ,அதிமுக கூட்டணிக்கு அதிக சீட்டு ஒதுக்கப்பட்டதாகவும் பா.ஜ.க விற்கு நான்கு சீட்டுகள் மட்டும் ஒதுக்கப்பட்டதாக தெரிகின்றது.

காங்கிரஸ் சார்பிலும் அநேக மனுக்கள் சீட் கேட்டு வந்துள்ளதாக கூறப்படுகின்றது கட்சி தேர்தல் பணிக்குழுவால் யாருக்கு சீட் கொடுக்கலாமென அலசி ஆராயப்பட்டு வருகின்றது.திமுக சார்பில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டதாக தெரிகின்றது. இதுபோக அநேக சுயேட்சைகள் புதுமுகங்களாக களம்காண தயாராகவுள்ளனர்.

நாட்கள் குறைவாக இருப்பதால் போட்டாபோட்டி நடக்கின்றது.கட்சியில் சீட் கேட்டு கிடைக்கப்பெறாத செல்வாக்குள்ள நபர்கள் சுயேட்ச்சையாக நிச்சயமாக களமிறங்குவார்கள் எனவும் அரசியல் விமர்சகர்களால் கணிக்கப்படுகின்றது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்