மீண்டும் ஊரடங்கு? மத்திய அரசு புதிய அறிவிப்பு

0
195

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா மாறுபாடு காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 269ஆக அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், டெல்லி இரண்டாவது இடத்திலும், தமிழகம் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இந்த நிலையில், ஒமைக்ரான் தொற்று அதிகம் கண்டறியப்படும் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தியுள்ளார். இரவு நேர ஊரடங்கு, பொதுமக்கள் கூட்டமாக கூட தடை போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கவும் அறிவுரை வழங்கியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்