மூதாட்டியிடம் நகை பறித்த காதல் ஜோடி கைது: உல்லாசமாக சுற்ற செயின் பறித்த போது சிக்கினர்

0
62

கோவை: கோவை தொண்டாமுத்தூர் தீயணைப்புத்துறை அருகே சுடுகாட்டில் கடந்த மாதம் 28ம் தேதி காளியம்மாள் (65) என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது முகவரி கேட்பதுபோல் இரு சக்கர வாகனத்தில் 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணும், ஒரு ஆணும் வந்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் காளியம்மாளின் கழுத்தில் கிடந்த சுமார் ஐந்தரை பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர். அந்த பெண் ஹெல்மெட் அணிந்த வாகனத்தை ஓட்ட, அந்த ஆண் பின்னால் அமர்ந்திருந்தார்.

தனிப்படை விசாரணை யில் நகை பறிப்பில் ஈடுபட்டது வடவள்ளி சோமையம்பாளையம் பகுதியை சேர்ந்த அனந்தநாராயணன் என்பவரின் மகன் பிரசாத் (20), கோவை சுங்கம் பைபாஸ் ரோடு ஸ்ரீநகர் முதல் வீதியை சேர்ந்த ஹரி என்பவரின் மகள் தேஜஸ்வினி (20) ஆகியோர் என்பது தெரியவந்தது. காதலர்களான அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 பேரும் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்கள். இருவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வருகிறார்களாம். பிரசாத் மொபைல் ஆப் மூலமாக பணம் இழந்தார். இதனால் ஏற்பட்ட கடனை திருப்பி கொடுக்க முடியாமல் இருந்துள்ளார்.

கடன் கொடுத்தவர்கள் கடும் நெருக்கடி கொடுத்துள்ளனர். எனவே அந்த தொல்லையில் இருந்து விடுபட கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். அவரது திட்டத்துக்கு காதலி தேஜஸ்வினியும் உடந்தையாக இருந்துள்ளார். மூதாட்டியிடம் கைவரிசை காட்டி தற்போது அவர்கள் போலீசில் சிக்கியுள்ளனர். ‘‘‘எங்கள் செலவுக்கு பணம் அடிக்கடி தேவைப்பட்டது. இதற்காகவும் ஆன் லைன் கடனை அடைக்கவும் நகை பறிப்பில் ஈடுபட்டோம்’’ என அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்