வாக்குப்பபதிவு நிலவரம் மித மந்தம் ; சென்னை மிக குறைவு

0
150

சென்னை: தமிழகத்திலேயே சென்னையில் 3வது சுற்று வாக்குப்பதிவு குறைவாக பதிவானதாக கூறப்பட்ட சென்னைவாசிகளை வாக்களிக்கும்படி மாநகராட்சி அழைப்பு விடுத்திருந்தது.. இதையடுத்து வாக்குப்பதிவு தற்போது லேசாக சூடுபிடித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.


தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை சரியாக 7 மணிக்கு தொடங்கியது.. வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. கடைசி ஒரு மணி நேரம் மட்டும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வி.ஐ.பி.க்களை கண்டதும் எழுந்து நின்ற தேர்தல் அலுவலர்கள்! வாக்குப்பதிவு மையங்களில் நடந்த ருசிகரம்!
பொதுமக்கள் கட்டுப்பாட்டு அறை
இன்று பதிவாகும் வாக்குகள், வரும் 22ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி இன்று பொதுவிடுமுறை அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்கள் வாக்குச்சாவடிகளில் ஓட்டளிக்க வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர்.. அதன்படி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது.. இந்த தேர்தலில் சுமார் 2 கோடியே 83 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்… எனினும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி சென்னையில் 3.96% வாக்குகள் பதிவாகியிருரந்தது.
சென்னை குறைவு ஏன்
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களைவிட சென்னையில் குறைவான வாக்குப் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் முதல் கட்ட சுற்றிலேயே தெரிவித்திருந்தது.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒட்டு மொத்தமாக 8.21 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தது.. அதேபோல, சென்னையில் காலை 11 மணி நிலவரப்படி 17.88% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.. தமிழகத்தின் தலைநகரில் வாக்குப்பதிவு இவ்வளவு மந்தமாக இருக்க காரணம் தெரியவில்லை. எனவே, அனைவரும் வாக்களிக்க வருமாறு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

சட்டசபை தேர்தல் வாக்கு சதவீதம்
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் இது போலவே சென்னையில் வாக்கு சதவீதம் குறைவாக பதிவாகியிருந்தது.. அதிலும் தமிழகத்தில் மிகக்குறைவான வாக்குகள் பதிவான தொகுதிகளின் பட்டியலில், கடைசி 5 இடங்களுமே சென்னையில்தான் இடம்பெற்றிருந்தது, அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.. தற்போது அதுபோலவே, இன்றைய 3 வாக்குப்பதிவு சுற்றிலும் சென்னை பின்தங்கி உள்ளது.. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவுக்கு நேரமிருப்பதால், வாக்குப்பதிவு விறுவிறுப்பாகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்