சீமான் காட்டம் ; திராவிட ஆட்சியாளர்களால் வாக்குபதிவு குறைவு

0
218

சீமான் வாக்களித்துவிட்டு செய்தியாளர்களை பேட்டியில் நான் உள்ளே சென்றதும் நான் வாக்களிக்க வந்திருக்கிறேன் என தெரியாமல் அந்த அதிகாரி 45 வாக்குகள் பதிவாகி இருக்கிறது என்று தெரிவித்தார். அதாவது அவர் நான் பார்வையிட வந்திருக்கிறேன் என நினைத்துவிட்டார். ஆனால் நான் வாக்களிக்க வந்திருந்தேன், அதைக் கூறி எனது வாக்கினை பதிவு செய்தேன். அவர் கூறியதே பார்க்கும் பொழுது 45 வாக்குகள் என்பது மிகக் குறைவானதாகும்.

Vikravandi byelection: Seeman booked for provocative speech | Chennai News  - Times of India

நேரம் ஆகியும் மக்கள் வாக்களிப்பதை தனது ஜனநாயக கடமை என்பதை நினையாமல் வாக்குச்சாவடிக்கு வராமலேயே இருக்கிறார்கள். சுமார் 45 முதல் 50 சதவீதமும் சில இடங்களில் 60% மட்டுமே வாக்குகள் பதிவாகியது என்றால் மக்கள் ஆட்சியாளர்கள் மீது கொண்ட வெறுப்பு உணர்வின் காரணமாக இவ்வாறு வாக்களிக்க வராமல் தங்களது வாக்கினை பதிவு செய்யாமலே இருந்து விடுகிறார்கள். மேலும் சிலர் ஆட்சியாளர்கள் மீது கொண்ட கோபத்தில் நோட்டாவிற்கு வாக்களித்து விட்டு திரும்பிச் செல்கிறார்கள். இதை ஆட்சியாளர்கள் சரி சரியான முறையில் ஆட்சி செய்யவில்லை என்பதையே குறிக்கிறது இந்நிலை மாற வேண்டும் என்று தெரிவித்தார். மொத்தத்தில் திராவிட ஆட்சியாளரிகள் மீது மக்கள் வெறுப்பில் உள்ளதை ஆதங்கத்துடன் கூறினார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்