நீதிபதிக்கு நீதிமன்றத்திலேயே மிரட்டல் மதுரை பயங்கரவாதிகள்

0
235

நீதிமன்றத்திலேயே நீதிபதிக்கு மதுரை பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி வழக்கறிஞரகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு வேலூர் வெள்ளையப்பன், சேலம் ஆடிட்டர் ரமேஷ், பமரமக்குடி முருகன், டாக்டர் அரவிந்த் ரெட்டி என்று இந்து அமைப்பு மற்றும் பாஜக நிர்வாகிகள் மிகவும் கொடுரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். இந்த படுகொலையில் மதுரையை சேர்ந்த போலீஸ் பக்ருதீன் என்ற பயங்கரவாதி தலைமையில் ஜிகாத் புனிதப் படை ஒன்று செயல்படுகிறது. இதில் தொடர்புடைய பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்ட பயங்கரவாதிகள் உறுப்பினர்களாக செயல்படுகின்றனர். இவர்கள்தான் பாஜக மற்றும் இந்து அமைப்புகளை படுகொலை செய்தனர் என விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் சம்மந்தமான வழக்கு விசாரணை சென்னை, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீதிபதி இளவழகன் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்டோர் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மூன்று பேரிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்டார். இந்த வழக்கில் நீங்கள் வழக்கறிஞரை நியமனம் செய்யாவிட்டால் நீதிமன்றமே வழக்கறிஞரை பணியமர்த்தும். வருகின்ற வாய்தாவில் சாட்சிகளை விசாரணை செய்வோம் என்றார்.

இதற்கு குறுக்கிட்ட பிலால் மாலிக் எங்களின் அனுமதி இல்லாமல் நீங்களே வழக்கறிஞரை நியமனம் செய்து கொள்வீர்களா, அதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா. அது போன்று இருந்தால் எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும் என்றார். இதனையடுத்து நீதிபதி பேசும்போது, உங்களுக்கு சட்டப்படி தெரிவிக்கப்படும் என்றார். இதன் பின்னர் மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார் நீதிபதி. அப்போது பக்ருதீன் எங்களை எந்த போலீஸ்காரரும் தொடக்கூடாது. நாங்களே நீதிபதியிடம் பேச வேண்டும் என்று மிரட்டும் தொனியில் பேசினார். இந்த வழக்கை நாங்கள் நடத்த விடமாட்டோம். இதனால் எங்களை தூக்கில் போடுவீர்களா அதை செய்யுங்க என்று மிரட்டும் தொனியில் பேசினார். இதனால் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கறிஞர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். நீதிமன்றத்திலேயே நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுக்கும் பயங்கரவாதிகளை ஏன் இன்னும் தூக்கில் போடவில்லை என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்