மாண்டலின் இசைக்கலைஞர் ஸ்ரீனிவாஸ் நினைவு நாள். செப்டம்பர் 19, 2014

0
175

இன்று மாண்டலின் இசைக்கலைஞர் ஸ்ரீனிவாஸ் நினைவு நாள். செப்டம்பர் 19, 2014. மாண்டலின் ஸ்ரீனிவாஸ், தன்னுடைய மாண்டலின் இசைக் கருவி மூலம் பாடல்களை ஒலிக்கச் செய்து, இசை ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்.

இவர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தின் பாலக்கோல் நகரில் பிறந்தவர். தனது ஆறாவது வயதில் தந்தை சத்தியநாராயணாவின் மாண்டலின் இசைக்கருவியை வாசிக்கத் தொடங்கியதைக் கண்டு இவரது தந்தை இவருக்கு மாண்டலின் இசைக்கருவியை வாசிக்கச் சொல்லிக் கொடுத்தார்.

பின்னர் இவரது தந்தையின் ஆசிரியரான ருத்ரராஜூ, சுப்பாராஜூ இவருக்கும் பயிற்சியளித்தார். இவரது சகோதரரான உப்பலப்பு ராஜேஸ் இவரைப்போலவே மாண்டலின் இசைக்கலைஞர் ஆவார். ஸ்ரீனிவாஸ் இங்கிலாந்து மற்றும் கனடா நாடுகளின் முன்னணி இசைக் கலைஞர்களுடன் (ஜாண் மெக் லெளக்லின், மைக்கேல் நெய்மென் மற்றும் மைக்கேல் ப்ரூக்) இணைந்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.

சத்தியசாயி பாபாவின் பக்தரான இவர் அவரது முன்னிலையில் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். மத்திய அரசின் ‘பத்மஸ்ரீ’, “சங்கீத ரத்னா”தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்பட பல விருதுகளைப் பெற்றவர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்