நெல்லை தமுமுக சார்பில் கொடுத்த புகாரில் மாரிதாஸ் கைது

0
192

இந்தியாவில் தப்லீக் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் கொரோனாவை பரப்பினார்கள் என்று அவதூறாகவும், முஸ்லிம்களுக்கெதிராக வெறுப்பை தூண்டும் வகையிலும், சமூகங்களுக்கிடையே மோதல் ஏற்படும் வகையில் கடந்த 2020 வருடம் ஏப்ரல் 2ம் தேதி மாரிதாஸ் யூடியூப் சேனலில் பேசியது குறித்து….

2020 ஏப்ரல் 4ம் தேதி நெல்லை மேலப்பாளையம் பகுதி தமுமுக சார்பில் தமுமுக நெல்லை மாவட்ட தலைவர் கே.எஸ்.ரசூல்மைதீன் அறிவுறுத்தலின்பேரில் மாரிதாஸ் மீது தமுமுக உறுப்பினர்
முகம்மது காதர் மீரான் நெல்லை மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. (குற்ற எண் 136/2020)

மாரிதாஸ் இந்த வழக்கில் ‌பிணை பெறாமல் இருந்த நிலையில் தற்போது வேறு வழக்கில் சிறையில் ‌இருக்கும் மாரிதாஸை நெல்லை மேலப்பாளையம் காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்