ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வுக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் 9 மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட கலெக்டர் “ஆல்பி ஜான் வர்கீஸ்” தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவள்ளுர் மாவட்டத்தில் வரும் 12.2.2022 முதல் 20.2.2022 வரை (19.02.2022 தவிர்த்து) ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை – மற்றும் கணினி பயிற்றுநர் நிலை – 1 க்கான தேர்வுகள் இணைய வழியாக கணினிகள் மூலம் நடைபெற உள்ளது. இத்தேர்வு, இணையதளம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இடம் பெற்ற 9 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது.
அதன் விவரம் வருமாறு – ஆவடி, ஆலிம் முகமத் சலேக் பொறியியல் கல்லூரி, நசரத்பேட்டை, லயோலா பொறியியல் தொழில் நுட்ப பயிலகம், பூந்தமல்லி, எஸ்.ஏ.பொறியியல் கல்லூரி, ஆவடி, செயின் பீட்டர் பொறியியல் தொழில் நுட்ப கல்லூரி, ஆவடி, செயின் பீட்டர்ஸ் உயர் கல்வி ஆராய்ச்சி மையம், ஆவடி, வேல் டெக் நாகராஜன், டாக்டர் சகுந்தலா அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி ஆராய்ச்சி நிலையம், சூரபட்டு, வேலம்மாள் பொறியல் கல்லூரி, பஞ்செட்டி, வேலம்மாள் பொறியியல் தொழில்நுட்ப பயிலகம், திருவள்ளூர், அரண்வாயல்குப்பம், பிரதியுஷா பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வுகள் காலை 9 மணி, பிற்பகல் 2 மணி என இரு வேளைகளில் நடைபெறவுள்ளது. இதனால் காலை வேளையில் தேர்வெழுதுவோர் 7.30 மணிக்குள்ளாகவும், பிற்பகல் தேர்வு எழுதுவோர் 12.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்தில் சரியாக ஆஜராக வேண்டும். அப்போது, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுடன், புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட அடையாள அட்டைகளான ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, கடவுச்சீட்டு ஆகியவைகளில் ஏதாவது ஒன்றை தவறாமல் கொண்டு வர வேண்டும். மேலும், இத்தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பெ.சூர்யா, நெல்லை.