மருத்துவ மாணவிகள் காணோளி- சைபர் தாக்குதல் நடப்பதால் இனையதளம் துண்டிக்கப்படலாம் பெற்றோர்கள் பயப்பட வேண்டாம்.

0
205

சைபர் தாக்குதல் நடந்தால் நாங்கள் தொலைத்தொடர்பு வசதிகளை ஒன்றும் பயன்படுத்த முடியாது இந்தியாவில் உள்ள எங்களது பெற்றோர்களோ அல்லது அரசாங்கத்தின் தொடர்பு கொள்ள முடியாது என குறை நீரில் உள்ள மருத்துவ மாணவர் மற்றும் மாணவிகள் வருத்தம் தெரிவித்து காணொளி வெளியிட்டிருக்கிறார்கள். அதில் இங்கே தொடர்ச்சியாக சைபர் தாக்குதல் நடந்து வருவதால் இன்று இரவுக்குள் இணையதளங்கள் முடக்கப்படும், என்று தகவல்கள் வருகின்றது அப்படி இணையதளங்கள் முடக்கப்பட்டால் எங்களால் உங்களிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள முடியாது. ஆனால் நாங்கள் இந்திய அரசை நம்புகிறோம், முழுமையாக நம்பிக் கொண்டிருக்கிறோம். எங்களது பெற்றோர்கள் இது குறித்து எந்த கவலையும் கொள்ள வேண்டாம். எங்களுடைய பகுதியில் இணையதளம் துண்டிக்கப்பட்டால் நாங்கள் தொடர்பு கொள்ள முடியாமல் இருக்கும். அப்படி இருந்தால் நீங்கள் பயப்படாமல் இருங்கள், எங்களை இந்திய அரசு மீட்டு காப்பாற்றிக் கொண்டு வந்துவிடும் என்று அந்த காணொளியில் மருத்துவ மாணவி தெரிவித்தார்.

பெ. சூரிய , நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்