கடுக்காயின் மருத்துவ பலன்கள் :

0
339

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த பொடிகளை இரவில் தண்ணீரில் காய்ச்சி வைத்து நீரை காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

நாவறட்சி, தலை நோய், வயிற்றுவலி, குஷ்டம், இரைப்பு, தொண்டை நோய், புண், கண் நோய், வாதம், வயிற்றுப்புண், காமாலை போன்ற நோய்களைக் குணப்படுத்தும் தன்மையும் கடுக்காய்க்கு உண்டு.

பல் ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவு, பல் அசைவு, ஈறுகளில் உண்டாகும் புண், வாயில் ஏற்படும் வாடை போன்றவைகளை போக்க கடுக்காய் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொப்பளிக்க வேண்டும். இது சிறந்த கிறுமி நாசினியாகவும் செயல்படுகிறது.

கடுக்காய் பொடியை சம அளவு நெய்யில் வறுத்து இந்து உப்புடன் கலந்து 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

கடுக்காய் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் ஈறு வலி குணப்படுவதோடு ஈறில் இருந்து வரும் ரத்தம் நிற்கும். பல்லும் உறுதியாகும்.

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், சிறுநீர்க் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள் மூலம், சீழ் மூலம், ரத்த மூலம், ரத்த பேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்து கடுக்காய்.

இதைப் பற்றி சித்தர் கூறும் பாடலில் ” காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே ” அதாவது வெறும் வயிற்றில் இஞ்சியும், நண்பகல் சுக்கும், இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் ( 48 நாட்கள் ) சாப்பிட்டு வர கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்