எம்.ஜி.ஆரின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’, வெப் சீரிஸ் தொடராக உருவாக உள்ளது.

0
194

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 105வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சினிமாவில் அவரது கனவு படமான ‘பொன்னியின் செல்வன்’ குறித்தான அறிவிப்பு எம்.ஜி.ஆர். பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது.

‘பொன்னியின் செல்வன்’: எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய வரலாற்று புதினம் ‘பொன்னியின் செல்வன்’. இந்த நாவலை திரைத்துறையில் படமாக கொண்டு வர ஆசைப்பட்டவர்களில் நடிகர் எம்.ஜி.ஆர். முக்கியமானவர்.

‘பொன்னியின் செல்வன்’ கதையை தானே இயக்கி வந்தியத்தேவனாகவும், அருண் மொழிவர்மனாகவும் இரட்டை கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என அவர் விரும்பினார். ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போனது. பின் நாடக வடிவமாகவும் ‘பொன்னியின் செல்வன்’ அரங்கேறியது.

இயக்குநர் அஜய் பிரதீப் அவர்கள் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியின்படி “கொரோனா பரவல் தீவிரத்தை பொறுத்து இந்த மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் வெப்சீரிஸூக்கான படப்பிடிப்பு தொடங்கி விடும் என தெரிகிறது. முதலில் நான்கு எபிசோடுகளை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். மொத்தம் 12 சீசன்களில் 153 எபிசோட்டுகள் இருக்கும். வெப் சீரிஸ் தனியாகவும் படம் தனியாகவும் எடுக்கவுள்ளார்கள். படம் இரண்டு வருடங்களில் மூன்று பாகங்களாக வெளியாகும். சின்ன பழுவேட்டையர், பெரிய பழுவேட்டையர் இப்படி சில கதாப்பாத்திரங்களில் வெப் சீரிஸ், படம் இரண்டிற்கும் பொதுவாக நடிகர்கள் நடிப்பார்கள். கதாநாயகர்கள் இரண்டிலும் மாறுவார்கள். மேலும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மணிரத்தினம் தற்போது ‘பொன்னியின் செல்வன்’ கதையை திரைப்படமாக இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார். ரஹ்மான் இசையில் கார்த்தி, ‘ஜெயம்’ ரவி, ஐஷ்வர்யாராய் பச்சன் உள்ளிட்ட ஏராளமான முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். இதன் முதல் பாகம் இந்த வருடம் கோடை விடுமுறையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செளந்தர்யா ரஜினிகாந்தந்தும் ‘பொன்னியின் செல்வன்’ கதையை இணைய தொடராக எடுக்கிறாரே என்ற கேள்விக்கு, “இந்த கதையை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். மக்களுக்கு எது பிடிக்கிறதோ அது ஓடும். இந்தியில் மூன்று ‘பகத்சிங்’ வெளியாகி மூன்றுமே வெற்றி பெற்றது. அதுபோல மூன்று ‘பொன்னியின் செல்வன்’ வெளியாகட்டும், வெற்றி பெறட்டும்” என்கிறார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்