ட்ரோன்கள் இறக்குமதிக்குத் தடை – மத்திய அரசு..

0
155

வெளிநாடுகளில் இருந்து ட்ரோன்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது. “மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம்” வெளியிட்டுள்ள அறிக்கையில், “ட்ரோன்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு தடை என்றும் ட்ரோன்களின் உதிரி பாகங்களை இறக்குமதி செய்துகொள்ளலாம், அதற்கு எந்த அனுமதியும் வாங்கத் தேவையில்லை” எனவும் கூறப்பட்டுள்ளது.

இராணுவப் பயன்பாட்டிற்காக மட்டும் இறக்குமதி செய்ய இத்தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது . மேலும் உள்நாட்டிலேயே ட்ரோன்கள் தயாரிப்பு தொழில் நுட்பத்தை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழ்,
நெல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்