பத்திரிகையாளர் துரைராஜ் மறைவிற்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

0
305


சென்னை, ஜன. 15 –
பத்திரிகையாளர் எஸ்.துரைராஜ் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். “மூத்த பத்திரிகையாளர் எஸ்.துரைராஜ் உடல்நலக்குறைவால் மறைவுற்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இடதுசாரிப்பார்வையும் மனிதநேயப்பற்றும் கொண்டிருந்தவர் துரைராஜ், எளிய மக்களின் உரிமைகள் மற்றும் ஏற்றத்துக்கான கருவியாக தன் பணியைப் பயன்படுத்திக் கொண்டார். பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளிலும் பொறுப்பு வகித்த அவர், அடக்குமுறைகளுக்கு எதிரான தனது செயல்பாடுகளுக்குப் பெயர் பெற்றவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்