4 ஆவது முறையும் தமிழரைத் தேர்ந்தெடுத்த மத்திய அரசு ..

0
314

(29-01-2022) நாட்டின் பொருளாதாரம் தொடர்பான மிக முக்கிய பதவியான “தலைமைப் பொருளாதார ஆலோசகர்” பதவிக்கு தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட “ஆனந்த நாகேஸ்வரன்” என்பவர் மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட அனந்த நாகேஸ்வரன் இன்று அரசால் பதவியேற்கவுள்ளார்.

இதற்கு முன்பு இப்பதவியில் இருந்த கே.சுப்பிரமணியன் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் பதவி விலகியதை அடுத்து நான்காவது முறையாகவும் தமிழகத்தைப் பூர்விகமாக கொண்டவரை இப்பதவிக்கு நியமனம் செய்தது மத்திய அரசு. இதற்கு முன்பு இப்பதவியில் இருந்த “ரகுராம் ராஜன், கே சுப்பிரமணியன், அரவிந்த் சுப்பிரமணியன்” ஆகியோரும் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் தான். இந்த முறை தலைமைப் பொருளாதார ஆலோசகராக பதவியேற்க உள்ள திரு அனந்த நாகேஸ்வரன் அமெரிக்கப் பல்கலைகழகத்தில் பொருளாதாரத்திற்கான டாக்டர் பட்டம் பெற்றவர் என்பதும் உலகின் பொருளாதார பாதையை முன்கூட்டியே கணிப்பதில் வல்லவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொருளாதார நிபுணர், பேராசிரியர், இதழாசிரியர் எனப் பன்முகம் கொண்ட இவர் வரப்போகும் மூன்று ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்