நெல்லை மாநகரில் பல இடங்களில் வளர்ந்திருக்கும் காளான்கள்

0
173

நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரங்களில் பெய்த மழையினால் வயல்வெளிகள் மரங்கள் இருக்கும் இடம் மற்றும் ஈரபதம் உள்ள இடங்களில் காளான்கள் அதிகம் வளர்ந்து காணப்படுகிறது.

காளான் என்பது மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம் ஆகும். பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளான் பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக் கூடியது, இயற்கையாக வளரும் காளான்களை பிடுங்கிப் பயன்படுத்துகின்றனர், பல நாடுகளில் காளான் முறையாகப் பயிர் செய்து உற்பத்தி செய்யப்படுகிறது.

மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான, உயிர்ச்சத்து டி காளானில் அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம், உணவுக்காளான்கள் சுவையும், சத்துமிக்க சிறந்த உணவாகப் பயன்படுகின்றன, ரொட்டிகள் செய்யவும் காளான்கள் பயன்படுகின்றன.

தற்போது மழை காலம் என்பதால் மண் பகுதிகளில் ஈரப்பதம் உள்ளதால் காளான்கள் அதிக இடங்களில் வளர்ந்து காணப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்