தமிழகம், கர்நாடகம் இடையே மோதல் போக்கை உருவாக்கிய நாம் தமிழர் கட்சி

0
124

கர்நாடகாவில் இருந்து தேனி மாவட்டம் பெரியகுளம் வழியாக கேரள மாநிலம் சபரிமலைக்கு சென்ற ஐயப்ப பக்தர்களை மிரட்டியதாக புகார். ஒரு வேனில் கன்னட சலுவாலி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் கொடி கட்டப்பட்டு இருந்திருக்கிறது

இதைக் கண்ட தேனி மாவட்டம் பெரியகுளம் நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் புஷ்பராஜ், அந்த வாகனத்தை மறித்து கட்சிக்கொடி கட்டக்கூடாது. சபரிமலை சென்றுவிட்டு மீண்டும் வரும்போது இந்த கொடியை கட்டியிருக்கக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார்

இதை அடுத்து வேனில் பயணம் செய்தவர்கள் கொடியை அகற்றினர். இந்த நிகழ்வை தனது செல்போனில் வீடியோ பதிவு செய்த புஷ்பராஜ் சமூக வலைதளங்களில் பரப்பி இருக்கிறார். இரு மாநில மக்களிடையே சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையில் செயல்பட்ட புஷ்பராஜ் மீது தென்கரை விஏஓ கணேசன் போலீசில் புகார். இதையடுத்து போலீசார் புஷ்பராஜை கைது செய்து சென்றனர்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்