தண்டனையை ரத்து செய்யக்கோரி யுவராஜ் தரப்பில் மனு தாக்கல்

0
224

தமிழகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நாமக்கல் என்ஜினீயர் கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில் “தீரன் சின்னமலை பேரவை நிறுவனர்” யுவராஜ் உட்பட 10 பேருக்கு சாகும் வரை ஆயுள் சிறை தண்டனை வழங்கி மதுரை மாவட்ட வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மதுரை சிறப்பு நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

Engineer Gokulraj File Picture

அந்த மனுவில் “கோகுல்ராஜை தாங்கள் கடத்தி சென்று கொலை செய்ததற்கான சிசிடிவி உட்பட எந்த ஒரு ஆதாரங்களும் இல்லை ,மேலும் இந்த வழக்கில் பெரும்பாலான சாட்சிகள் அரசு அதிகாரிகள்தான், எனவே தகுந்த சாட்சியங்களும் ஆதாரங்களும் இல்லாமல் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் அதுவரை தங்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இதற்கு “தமிழக அரசும், கோகுல்ராஜின் தாயாரும் பதிலளிக்க வேண்டுமென” உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்