வெகு சிறப்பாக நடைபெற்ற நம்மாழ்வார் தெப்பத் தேரோட்டம் – ஆழ்வார்திருநகரி .

0
217

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் திருக்கோயிலில் கடந்த 12 ஆம் தேதி மாசித் திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் “சாமி நம்மாழ்வார்” பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா செல்வார். இதனால் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.
பின்னர் 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் 6 மணிக்கு திருமஞ்சனம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.

இரவு 7 மணிக்கு சுவாமி உற்சவர் பொலிந்து நின்ற பிரான் தாயார்களுடன் தெப்பத்தேரில் எழுந்தருளி, தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு
ஆண்டும் 3 நாட்கள் தெப்பத் தேரோட்டமானது நடைபெறும். இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் தொடங்கி நேற்று ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் திருக்கோயிலுக்குச் சொந்தமான நீர் நிரம்பிய தெப்பக்குளத்தில் தேரோட்டமானது நடைபெற்றது.ஆழ்வார்திருநகரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

11-ம் திருவிழாவான நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு நம்மாழ்வார் தெப்பத்திருவிழா நடைபெற்றதுடன், இன்று தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்