நேஷனல் ஹெரால்டு விவகாரம் – நாளை நாடு தழுவிய செய்தியாளர் சந்திப்புக்கு காங்கிரஸ் ஏற்பாடு!

0
48

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரம் தொடர்பாக நாளை நாடு தழுவிய செய்தியாளர் சந்திப்புக்கு அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

நேஷ்னல் ஹெரால்ட்டு பத்திரிகைக்குச் சொந்தமான அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை முறைகேடாக கையகப்படுத்தியது தொடர்பாக விசாரணை நடத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

முதலில், இருவரும் ஜூன் 8ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இதன் காரணமாக, அவருக்கு தேதி மாற்றப்பட்டு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அதில், ஜூன் 23ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதற்கான மருத்துவச் சான்று, சிகிச்சை பெற்று வருவதற்கான சான்று உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறைக்கு அனுப்பி, நேரில் ஆஜராக 3 வார கால அவகாசம் கோரி இருந்தார் சோனியா காந்தி.

எனினும், அவரது இந்த கோரிக்கை தொடர்பாக அமலாக்கத்துறை இதுவரை பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதேபோல், ராகுல் காந்தியும், தான் வெளிநாட்டில் இருப்பதால் ஜூன் 8ம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக இயலாது என்றும், வேறு தேதி அளிக்கும்படியும் கோரி இருந்தார். அவரது இந்த கோரிக்கையை அடுத்து ஜூன் 13ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை மறு சம்மன் அனுப்பியது.

அமலாக்கத்துறையின் சம்மன் காரணமாக சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் நாளை நாடு தழுவிய அளவில் செய்தியாளர் சந்திப்பு நடத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்