“இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தம்” – அகில இந்திய தொழிற்சங்கக் கூட்டமைப்பு

0
180

அகில இந்திய தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சார்பில் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படாமல் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, மின்சார சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை கோயம்பேட்டில் 90 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் .மின்சார ரயிலும் மெட்ரோ ரயிலும் வழக்கம்போல் இயங்குவதால் பணிகளுக்குச் செல்வோர் மெட்ரோ ரயில் நிலையத்திலும் புறநகர் ரயில் நிலையத்திலும் குவிந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் மொத்தம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கத்தில் இருக்கும் நிலையில் இன்று தொழிற்சங்கத்தினரின் வேலை நிறுத்தத்தால் 5 ஆயிரத்திற்கும் குறைவான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகள் வழக்கம் போல் இயங்குகின்றன.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்