உடல் வலிமை பெற

0
237

மருந்து -1

வில்வ பழ சதையை கற்கண்டு கலந்து நெல்லிக்காயளவு காலை நேரத்தில் மட்டும் சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும் புளி, காரம் அறவே கூடாது.

மருந்து -2

அமுக்கிராக் கிழங்கு -175 கிராம்

அரிசி திப்பிலி -20 கிராம்
மிளகு -20 கிராம்
ஏல அரிசி -20 கிராம்
கிராம்பு -10 கிராம்
சுக்கு -10 கிராம்
பேரிச்சங்காய் கொட்டை நீக்கியது -10 கிராம்

இவைகளை இடித்து வஸ்திரகாயம் செய்து சீனாவில் பத்திரப்படுத்தவும் இதில் 5 கிராம் எடுத்து பசு வெண்ணெயில் குழைத்து சாப்பிட்டு கற்கண்டு கூட்டி காய்ச்சிய பசும்பால் ஆழாக்கு பருகவும் உடல் வலிமை பெறும்.[

[மூலிகைகள் மற்றும் மருந்துப் பொருட்களை இடித்து, மெல்லிய துணியில், சலித்து எடுக்கும் முறைக்குப் பெயர்தான் “வஸ்திரகாயம்” என்பதாகும்]

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்