வெட்டை நோய்க்கு மருந்து

0
313

மருந்து ; 1
சிறு அம்மான் பச்சரிசி பூண்டு பூண்டு வேர் உட்பட நீரில் சுத்தமாக கழுவி எடுத்துக்கொள்ளவும் இதை அப்படியே அம்மியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும் வேலைக்கு கொட்டைப்பாக்கு அளவு எடுத்து அரை கப் பாலில் கலக்கி பருகவும் 6 வேளை சாப்பிட வெட்டை நோய் குணமாகும் புளி காரம் நீக்கி பத்தியம் உணவை சாப்பிடவேண்டும்.

மருந்து ; 2
சீரகம் வெங்காயம் இரண்டையும் சம அளவு எடுத்து கொட்டைப்பாக்கு அளவு பசும் பாலும் சேர்த்து பருகவும். புளியும், போகமும் கூடாது.

மருந்து ; 3
கீழாநெல்லி 50 கிராம் சீரகம் 20 கிராம் இரண்டையும் அரைத்து கழற்சிக் காயளவு தயிரில் கரைத்து காலை மாலை சாப்பிடவும் புளி உணவில் சேர்க்கக்கூடாது.

மருந்து ; 4
ரஸ்தாளி வாழைப்பழம் பூவை மட்டையை நீக்கி எடுத்து, நரம்போடு போட்டு கால் லிட்டர் பசும்பால் விட்டு இடித்து வடிகட்டி கற்கண்டு கூட்டி பருகிய வெட்டைச்சூடு ஆச்சரியப்படும் படியாக குணமாகும் மூன்று நாட்கள் காலையில் மட்டும் மருந்து சாப்பிடவும் காரம் புளி தள்ளுபடி செய்யவும்.

பெ. சூர்யா நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்