கழுத்தில் கரண்டி மாலையுடன் சுயேட்சை வேட்பாளர் – நாசரேத்

0
161

தூத்துக்குடி மாவட்டம் , “நாசரேத்” மொத்தம் 18 வார்டுகள் கொண்ட பேரூராட்சி ஆகும். உள்ளாட்சி மன்றத் தேர்தலையொட்டி இப் பேரூராட்சியின் 8வது வார்டு வேட்பாளராக களம் காணும் சுயேட்சை வேட்பாளர் ஒருவரின் வித்தியாசமான தேர்தல் பிரச்சாரம் வாக்காளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது .சுயேட்சை வேட்பாளராக களம்காணும் இவருக்கு தேர்தல் ஆணையம் ‘கரண்டி’ சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

எனவே கரண்டி சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்க அவர் கரண்டி மாலை அணிந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கையில் கரண்டியை வைத்து கல்கண்டை அள்ளி வாக்காளர்களுக்குக் கொடுத்து வாக்கு சேகரித்தார். வித்தியாசமாக இருந்த அவரது தேர்தல் பிரசாரம் வாக்காளர்களை வெகுவாகக் கவர்ந்தது..

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்