ராகுல் காந்தியின் கருத்தை ஏற்கமுடியாது – அமெரிக்கா..

0
196

(03-02-2022 )கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற மக்களவை உறுப்பினரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான திரு.இராகுல் காந்தி அண்மையில் மக்களவையில் அவருக்கான நேரத்தில் பேசும்போது, இந்த ஆண்டு நாட்டின் குடியரசு நாள் விழாவில் வெளிநாட்டைச் சேர்ந்த விருந்தினர்கள் யாரும் கலந்து கொள்ளாதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார். மேலும் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளினால் பாகிஸ்தானும் சீனாவும் கூட்டு சேர்ந்து விட்டதாகவும் உலக நாடுகள் இந்தியாவை தனித்து விட்டு விட்டதாகவும் கூறினார்.

இது தொடர்பான வினாவிற்கு விடை அளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் (Ned Price), ராகுல் காந்தியின் கருத்தை அமெரிக்கா ஏற்கவில்லை என்றும் பாகிஸ்தான் இப்போதும் அமெரிக்காவின் நட்பு நாடாகதான் வழங்கி வருவதாகவும் கூறினார்..

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்