நீட் – இல் தேர்வான அரசு பள்ளி மாணவிக்கு உதவிய நெல்லை கல்வியாளர்

0
481

இன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம் சங்கரன் கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த சீவல்ராயனேந்தல் என்ற கிராமத்தில் வசிக்கும் சண்முகவேல் என்ற விவசாயியின் மகளான மாலினி‌ என்ற மாணவி நீட் தேர்வு எழுதி 343 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 14வது இடம் பெற்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி படிக்க தேர்வாகியுள்ளார். ஆனால் போதிய வசதியின்றி தவித்த மாணவியின் நிலை பற்றி அறிந்த கல்வியாளர் முனைவர் குணசேகர் அவர்கள் அவர்களை தொடர்புகொண்டு அந்த மாணவி இல்லத்திற்கே சென்று அந்த மாணவியை பாராட்டி ஊக்கம் அளித்து விட்டு அந்த மாணவியின் மருத்துவக் கல்வியின் இதர செலவுகளை தானே ஏற்றுக்கொள்வதாகஉறுதியளித்துள்ளார்.

அவருடன் தமிழர் மீட்பு களம் நிறுவனர் கரிகாலன் மற்றும் பாஜக வழக்கறிஞர் பவுன்ராஜ் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் மாணவிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

உங்கள் சேவை தொடர வேண்டும் என அந்த மாணவியின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் வாழ்த்தினார்கள். இவர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தனர்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்