நெல்லையில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா -அதிமுகவினர் கொண்டாட்டம்

0
221

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பேரறிஞர் அண்ணா 113 வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பு மேம்பாலம் அருகேயுள்ள அவரின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தலைமைக்கழக நிர்வாகிகள்,மாவட்ட கழக நிர்வாகிகள் இந்நாள் முன்னாள் நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள்,சார்பு அணி நிர்வாகிகள்,பகுதி,ஒன்றிய,நகர,பேரூராட்சி, வார்டு செயலாளர்கள் மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சியினர் பேரறிஞர் அண்ணா திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பேரறிஞர் அண்ணா 113வது பிறந்தநாள் விழா நெல்லை சந்திப்பு மேம்பாலம் அருகே உள்ள அண்ணா திருவுருவச்சிலைக்கு வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி மற்றும் பண்டிதர் சமுதாய முன்னேற்ற சங்கம் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

இந்நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட தலைவர் ராஜகோபால் பொருளாளர் ராம்குமார் இணை செயலாளர் சினேகிதன் சுரேஷ் பாளை ஒன்றிய தலைவர் தவசி வழக்கறிஞர் வேலாயுதம் ராஜரத்தினம் ஆலோசகர் செல்லத்துரை ஆகியோர் நிகழ்ச்சியின்போது உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்