திருமணம் செய்வதாக கூறி மலேசியா பெண்ணிடம் பணம் பறித்த நெல்லை வாலிபர் !

0
231

மலேசியா நாட்டை சேர்ந்த தமிழ்வாழ் இந்திய பெண்மணி மாலினி வயது 35 மலேசியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.

மாலினிக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்று வந்தநிலையில் நெல்லை திம்மராஜாபுரத்தை சேர்ந்த முத்துகுமார் என்ற வாலிபருடன் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.

கடந்த 2015 ம் ஆண்டு முதல் சமூக வலைதளங்கள் மூலம் அறிமுகமாகி இருவரும் நட்பாக பேச ஆரம்பித்துள்ளனர். முத்துகுமாரிடம் நட்பாக பேசிய மாலினி தான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்று விட்டேன், தற்போது பெற்றோருடன் வசித்து வருவதாகவும், குடும்ப விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

இதை பயன்படுத்திய முத்துகுமார் மாலினியை தானும் திருமணமாகி விவாகரத்து பெற்று தனிமையில் உள்ளேன், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகேயுள்ள திம்மராஜாபுரத்தில் வீடு உள்ளதாகவும், சொந்தமாக மளிகை கடை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

நட்பாக பேசிய இருவரும் நாளடைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் முத்துகுமார் சிறிது காலம் கழித்து மாலினியிடம் எனது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும், அதனால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்ய போகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இதை நம்பி மாலினி முத்துகுமாரிடம் ஆறுதல் கூறும் போது, நாம் திருமணம் செய்ய போகிறோம் தொழிலில் ஏற்பட்ட கடனையடைக்க பணம் அனுப்பு பின்பு மலேசியா வந்து உன்னை திருமணம் செய்து அங்கையே இருக்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

அதனால் மாலினி வங்கி விபரங்களை கேட்டு, முத்துகுமார் கேட்ட ஒரு குறிப்பிட்ட பணத்தை மலேசியாவில் இருந்து நெல்லைக்கு அனுப்பியுள்ளார். இப்படி பலமுறை முத்துகுமார் மாலினியிடம் கஷ்டம், கஷ்டம் என்று பணம் கேட்கும்போதெல்லாம் மாலினி முத்துகுமார் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியுள்ளார்.

குறிப்பிட்ட காலகட்டத்தில் தான் ஏமாற்ற படுகிறோமோ? என்று உணர்ந்த மாலினி தன்னை திருமணம் செய்துகொள் ; இல்லையேல் இந்தியா வருகிறேன் என்று கூறியுள்ளார்.அதற்கு முத்துகுமார், தான் மலேசியா வந்து உடனே திருமணம் செய்து கொள்கிறேன் விசா மற்றும் பாஸ்போர்ட் எடுக்க பணம் அனுப்புமாறு கேட்டுள்ளார்.

இதனையும் நம்பி மாலினி பணம் அனுப்பியுள்ளார். முத்துகுமார் பணத்தை பெற்று, பாஸ்போர்ட் மற்றும் விமானப்பயணச்சீட்டு குறிப்பிட்ட தேதியில் ஏஜெண்ட் மூலம் எடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். முத்துகுமார் கூறியத்தேதியில் மலேசியநாடு விமானநிலையத்தில் காத்திருந்த மாலினிக்கு ஏமாற்றமே மிஞ்சியது? முத்துகுமார் வரவில்லை, அப்போதுதான் முழுமையாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்று பதற்றத்துடன் மாலினி முத்துகுமார் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார்.ஆனால் கைபேசி அணைக்கப்பட்டுள்ளது.

ஒரு மாதம் கழித்து மீண்டும் முத்துகுமார் மாலினியை தொடர்பு கொண்டு மலேசியா நாட்டிற்கு வந்த என்னை விமானநிலையத்திற்குள் வைத்தே காவல்துறை பிடித்துவிட்டதாகவும், காரணம் கேட்டால் போலி விசாவில் வந்துள்ளதாகவும், ஏஜெண்ட் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், நாடகமாடியுள்ளார்.

திருமணம் செய்வதாக பணத்தை பறிகொடுத்து விட்டோம் என்று அறிந்த மாலினி, நெல்லைக்கு வருகிறேன் என்று முத்துகுமாரிடம் கூறியுள்ளார் அன்று முதல் முத்துகுமார் மொபைல் எண் வாட்ஸ்அப் எண் அனைத்தையும் மாற்றிவிட்டார். செய்வதறியாது மாலினி நெல்லைக்கு வந்து அந்த வாலிபரை பற்றி புகார் கொடுக்கவுள்ளார்.

அந்தநபரிடம் இதுவரை இந்தியமதிப்பிற்கு ரூபாய் 7 இலட்சம் வரை கொடுத்து ஏமாந்துள்ளதாக கூறியுள்ளார். தற்போது கொரோனா காலகட்டமென்பதால் மலேசியாவிலிருந்து இந்தியாவிற்கு வர இன்னும் விமானசேவை தொடங்கவில்லை: எனவே விமானசேவை தொடங்கியதும், நெல்லைக்கு வந்து காவல்துறை மூலம் தகுந்த ஆதாரங்களுடன் அந்தவாலிபர் மீது தக்க சட்ட நடவடிக்கையெடுக்க பாடுபடுவேன் என்று மாலினி இதன் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்