நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

0
361

நெல்லை அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன்
தொடங்கியது. முழு ஊரடங்கு காரணத்தால் பக்தர்கள் இன்றி கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற
சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோவில் தைப்பூச திருவிழா 12 நாட்கள் நடைபெறும், இந்த திருவிழா காலங்களில் திருநெல்வேலி பெயர் காரணம் பெற்ற நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி மற்றும் தைப்பூச தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்தத்
தொடக்க நிகழ்ச்சியான
திருவிழாவின் கோவில் நடை திறக்கப்பட்டு திருவனந்த கொடியேற்ற விழாவிற்கு பூஜையும், தொடர்ந்து கொடிப்பட்டம் கோவில் வீதியுலா புறப்பாடும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு மஞ்சள், இளநீர் பால், தயிர், உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. கொரனா ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் பக்தர்கள் இன்றி திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்