இந்திய பங்குச் சந்தை வாரியத்தின் தலைவராக “மாதபி பூரி புச்” நியமனம்.

0
186

இந்திய பங்குச் சந்தை மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தலைவராக “மாதபி பூரி புச்” மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். செபியின் தலைவர் அஜய் தியாகியின் காலம் பிப்ரவரி 28 நேற்றுடன் முடிவடைந்த நிலையில், புதிய தலைவராக மாதபி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.நிதி அமைச்சகம் கடந்த அக்டோபர் மாதம் தலைவர் பதவிக்கான விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுத்தது. இதற்கான காலக்கெடு டிசம்பர் 6 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.கடந்த பிப்ரவரி 22 அன்று “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்”, செபியின் பதவிக்கான தலைவர் இன்னும் தேர்தெடுக்கப்படவில்லை என்றார். இதற்கு முன்
1984ஆம் பேட்ச்-ஐ சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான அஜய் தியாகி , மார்ச் 1,2017 அன்று மூன்று ஆண்டுகளுக்கு தலைவராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவருக்கு 6 மாதங்கள் பதவி நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆகஸ்ட் 2020இல் அவரது பதவி காலம் மேலும் 18 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் செபியின் தலைவராக மாதபி பூரி பச் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் செபியின் முதல் பெண் தலைவராவார். இவர் ‘ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ்’ நிறுவனத்தின் முன்னாள் தலைவராகவும் பொறுப்பு வகித்தார். அதோடு செபியின் முழு நேர உறுப்பினராக 2017 – 2021 வரையில் இருந்தார்.மாதபிக்கு கண்காணிப்பு, போர்ட்போலியோக்கள், முதலீட்டு மேலாண்மை போன்ற முக்கிய அம்சங்களைக் கையாண்ட அனுபவம் உள்ளது. அகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் படித்த மாதபி, 1989 இல் ஐசிஐசிஐ வங்கியில் பணிக்கு சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தனியார் பங்கு நிறுவனமான கிரேட்டர் பசிபிக் கேபிட்டலுக்குத் தலைமை தாங்கினார். அதன் பின்னர் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தால் அமைக்கப்பட்ட புதிய மேம்பாட்டு வங்கியின் ஆலோசகராக அவர் பணியாற்றியுள்ளார். இப்போது இந்தியப் பங்குச் சந்தை வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள “மாதபி பூரி புச்” இப்பதவியில் இன்னும் மூன்று ஆண்டுகள் நீடிப்பார்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்