தமிழகத்தில் ரூபாய் 336 கோடியில் புதிய பாலங்கள் ..

0
125

தமிழகத்தில் ரூபாய் 336 கோடியில் மொத்தம் 144 இடங்களில் புதிய பாலங்கள் கட்டுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. நபார்டு வங்கியின் நிதி உதவியுடன் “ஈரோடு, கரூர், சேலம், தர்மபுரி, கடலூர், மதுரை, திண்டுக்கல், அரியலூர்”, ஆகிய மாவட்டங்களின் ஊரகப் பகுதிகளில் புதிய பாலங்கள் கட்டுவதற்கு ரூபாய் 336 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தரமான கட்டுமான பொருட்களைக் கொண்டு பாலங்கள் கட்டுவதற்கும் கட்டுமானப் பணிகளின் போது முறைகேடுகள் எதுவும் நடக்காமல் இருக்க தொடர்ந்து பணிகளை ஆய்வு செய்யுமாறும் அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்