தமிழகத்தின் புதிய ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களைப்பற்றி ஒரு சிறு பார்வை!

0
323

தமிழக ஆளுநராக இருந்த திரு பன்வாரிலால் புரோகித் அவர்கள் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து திரு ஸ்ரீரவீந்திர நாராயணரவி அவர்கள் தமிழகத்தின் புதிய ஆளுநராய் பதவியேற்றார். அவர் கடந்து வந்தப்பாதை பற்றி ஒரு சிறு அலசல்.

பீகாரில் உள்ள பாட்னாவில் பிறந்த ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி 1974ல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார் மற்றும் பத்திரிக்கைத்துறையில் சிறிது காலம் பணியாற்றியபிறகு 1976-இல் இந்தியக்காவல் சேவையில் சேர்ந்தார் மற்றும் அவருக்கு கேரளா கேடர் ஒதுக்கப்பட்டது.பல்வேறு பதவிகளில் கேரளாவில் பணியாற்றினார், பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பதவிகளில் பணியாற்றினார். உளவுத்துறையில் பணியாற்றியபோது, நாட்டில் சுரங்க மாஃபியாக்கள் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் கும்பல்களுக்கு எதிராகப்பல ஊழல் எதிர்ப்பு போர்களை நடத்தினார். நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்பில் இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறை பணியகத்தில் (IB) இருந்தபோது, அவர் ஜம்மு & காஷ்மீர் மற்றும் வடகிழக்கு உள்ளிட்டப்பகுதிகளில் பணியாற்றினார். மனிதக்குடியேற்றத்தின் இயக்கவியலில் நிபுணத்துவம் பெற்றார் மற்றும் எல்லை மக்களின் அரசியல் சமூகவியலில் விரிவாய் பணியாற்றினார். இனக் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்டப்பகுதிகளில் அவர் முக்கியப்பங்கு வகித்ததன் மூலம் பல ஆயுதக்கிளர்ச்சி குழுக்களை அமைதிக்கு கொண்டு வந்தார். பயங்கரவாதம் மற்றும் உளவுத்துறை பகிர்வுக்கு இந்தியாவின் சர்வதேச ஒத்துழைப்பின் வடிவமைப்பாளர் ஆவார். இவர் பிரதமமந்திரி அலுவலகத்தில் கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராய் நியமிக்கப்பட்டார், அங்கு புலனாய்வு சமூகத்தின் தலைவராய், நாட்டின் உளவுத்துறை தேவைகளை பூர்த்திச்செய்தும் நிறுவனங்களை ஒருங்கிணைத்தும் வழிகாட்டினார். 29 ஆகஸ்ட் 2014 அன்று நாகா சமாதானப்பேச்சுவார்த்தை மையத்தின் உரையாசிரியராய் அவர் நியமிக்கப்பட்டார், அக்டோபர் 2018 இல் துணை தேசியப்பாதுகாப்பு ஆலோசகராய் நியமிக்கப்பட்டார். இந்தியக்குடியரசுத் தலைவரால் திரு ரவி நாகாலாந்தின் ஆளுநராய் ஆகஸ்ட் 1, 2019 ஆர்.என்.ரவி பொறுப்பேற்றார்.

ஸ்ரீரவீந்திர நாராயண ரவி அவர்கள் கேரளா பிரிவு முன்னாள் ஐ.பி.எஸ்.அதிகாரியாகவும், இந்திய உளவுத்துறையின் சிறப்பு இயக்குனாராகவும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்.அவரது பணி தற்போது தமிழகத்தில் பல புதுமைகள் மற்றும் மறுமல்ர்ச்சியை செய்யுமென ‘தென்பொதிகை செய்திகள்’ எதிர்பார்க்கின்றது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்