ரூ.5,000 கோடி செலவில் சித்தூர் – தஞ்சாவூர் இடையே விரைவு தேசிய நெடுஞ்சாலை பணிகள் : நிதின் கட்கரி

0
197

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள இந்திரா மைதானத்தில் 30 தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்தியசாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்று பேசியதாவது:

ஆந்திர மாநிலம் பல்வேறு துறைகளில் மிக வேகமாக முன்னேறி வருகிறது. குறிப்பாக விவசாயம், தொழிற்சாலைகளின் வளர்ச்சி விகிதம் இம்மாநிலத்தில் அதிகம்.இந்த வளர்ச்சியில் துறைமுகங்களின் பங்களிப்பும் சரிபாதியாகும். மத்திய அரசுக்கு அனைத்து மாநில வளர்ச்சியும் முக்கியம். ஆந்திர மாநில சாலை மேம்பாட்டுக்கு மத்திய அரசு ரூ. 3 லட்சம் கோடி நிதி ஒதுக்கி உள்ளது. ஆந்திராவில் 3 பசுமை சாலை திட்டம் அமல்படுத்தப்படும். 2024-ம் ஆண்டுக்குள் ராய்பூர்-விசாகப்பட்டினம் பசுமை விரைவு சாலை திட்டம் நிறைவடையும். நாக்பூர் – விஜயவாடா, சென்னை- பெங்களூரு விரைவு பசுமை சாலை திட்ட பணிகள் அமல் படுத்தப்படும். ரூ.5,000 கோடி செலவில், ஆந்திர மாநிலம் சித்தூர் – தமிழகத்தின் தஞ்சாவூர் இடையே விரைவு சாலை திட்டப்பணிகள் விரைவில் நிறைவு செய்யப்படும். இவ்வாறு கட்கரி கூறினார்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் பேசும்போது, ‘‘மத்திய அரசின் உதவியால்தான் மாநிலத்தில் நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டன. விஜயவாடாவில் கட்டப்பட்டுள்ள கனகதுர்கா மேம்பால பணிகள் மத்திய அமைச்சரின் உதவியால் விரைவாக நிறைவடைந்தது. மேலும் ரூ. 10,600 கோடி செலவில் ஆந்திர மாநிலத்தில் சாலைகள் சீரமைக்கப்படும்’’ என்றார்.

ஆ. அருண்பாண்டியன்,
மதுரை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்