Tuesday, December 7, 2021

நெல்லையில் புதிய செயலி ( LAHI ) அறிமுக விழா

‘பாரதிய பண்பாட்டு வகுப்பு’- LAHI – app அறிமுக விழாவானது பாளை தியாகராஜநகர் சின்மயா மிஷன் ஆசிரமத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு திரு A.காமராஜ் (குமரிகோட்ட பொறுப்பாளர் RSS) அவர்கள் தலைமை தாங்கினார்கள், திரு.K.ஜெயசேகரன் (RSS-திலி – மாநகரத் தலைவர்) அவர்கள் முன்னிலை வகித்தார்கள். மேலும் சின்மயா மிஷன் சுவாமி. ஜித்தேஷ் சைதன்யா ஆசியுரை வழங்கினார்கள்.

LAHI- செயலியை Dr.சேகர் மற்றும் தேவேந்திரசேனா – மாநில துணைத்தலைவர் கல்வியாளர்,முனைவர் அ.குணசேகரன் அவர்கள் செயலியை அறிமுகம் செய்தார்கள்.

மேலும் விவேகானந்தா வித்யாஸ்ரமம், நிர்வாகி திரு.திருமாறன் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக, இந்து முன்னணி மாநில துணைச்செயலாளர், வழக்கறிஞர் குற்றாலநாதன், சக்ஷம் இராஜகோபால், திருலோகநாதன் மற்றும் ‘தேவேந்திர சேனாவின்’ நிர்வாகிகள், அ.க. ஸ்டாலின், பா.அருமைத்துரை, சு.மாரிதுரைச்சாமி, N.பாஸ்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மாநில ‘குடும்ப ப்ரபோதன்’ அமைப்பாளர் திரு.வெங்கட்ராமன் ” இலட்சிய ஹிந்து குடும்பம்” மற்றும் LAHI – app பற்றி விளக்கவுரையாற்றினார். திரு.ராம்பாபு நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.சந்திரபிரபா, அர்ஜுன் சேதுராமன், ராமசாமி வெள்ளப் பாண்டி விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Articles

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Stay Connected

0ரசிகர்கள்லைக்
3,050பின்பற்றுபவர்கள்பின்பற்றவும்
18,800சந்தாதாரர்கள்குழுசேர்
- Advertisement -spot_img

Latest Articles