வேகமாக பரவும் புதிய வேரியண்ட் ; குறைந்தது கொரோன ஓமிக்ரான்

0
219

வாஷிங்டன்: ஓமிக்ரான் கொரோனா இப்போது தான் மெல்லக் குறைந்து வரும் நிலையில், BA.2 கொரோனா எனப்படும் ஸ்டெல்த் ஓமிக்ரான்கொரோனா பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக உலக நாடுகளை கொரோனா வைரஸ் தான் அலறவிட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் இதை முற்றிலுமாக ஒழிக்க முடியாத சூழலே எப்போதும் நிலவுகிறது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா உலகெங்கும் முதல் அலையை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து ஆல்பா, டெல்டா, ஓமிக்ரான் போன்ற கொரோனா வகைகள் அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தின.

கடந்த நவ. மாதம் தொடங்கி சில வாரங்களுக்கு உலகெங்கும் ஓமிக்ரான் கொரோனா தான் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தியாவில் கூட ஓமிக்ரான் அலை சமயத்தில் தினசரி கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைக் கூட தாண்டியது. இருப்பினும், நல்வாய்ப்பாக வேக்சின் செலுத்தியவர்கள் இடையே ஓமிக்ரான் பெரும்பாலான லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தியதால் உயிரிழப்புகள் அதிகரிக்கவில்லை. இப்போது இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளில் ஓமிக்ரான் கொரோனா பாதிப்பு மெல்லக்குறைந்து வருகிறது. இதனால் உலக நாடுகள் கட்டுப்பாடுகளை மெல்லத் தளர்த்தி வருகின்றன.

புதிய வேரியண்ட்
ஆனால், உலக சுகாதார அமைப்பு அதிகாரி ஓமிக்ரான் புதிய துணை வேரியண்ட் குறித்து புதிய கவலையை எழுப்பியுள்ளார். இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப பிரிவின் மரியா வான் கெர்கோவ் கூறுகையில், ‘இந்த கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கிறது. ஓமிக்ரான் கொரோனாவில் இருந்து பல துணை வேரியண்டகள் உருவாகியுள்ளது. நாங்கள் தொடர்ந்து அதைக் கண்காணித்து வருகிறோம். BA.1, BA.1.1, BA.2 மற்றும் BA.3 உள்ளிட்ட துணை வேரியண்ட்கள் உள்ளன. இதுநாள் வரை உலகெங்கிலும் ஆதிக்கம் செலுத்திய டெல்டாவை படுவேகமாக ஓமிக்ரான் பின்னுக்குத் தள்ளுகிறது.

5 இல் 1
பெரும்பாலான துணைப் வேரியண்ட் BA.1 தான் காணப்படுகிறது. இப்போது சில காலமாக BA.2 கொரோனா எனப்படும் ஸ்டெல்த் ஓமிக்ரான் கொரோனாவின் விகிதாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதில் மற்ற துணை வேரியண்ட்களை காட்டிலும் BA.2 வகை அதிகம் பரவக்கூடியதாக உள்ளது. வேகமாகப் பரவுகிறது என்பதற்காக BA.1ஐ விட BA.2 மிகவும் ஆபத்தானது எனச் சொல்ல முடியாது. இது குறித்து நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். உலகில் இப்போது பதிவு செய்யப்படும் 5 ஓமிக்ரான் கேஸ்களில் ஒன்று இந்த BA.2 வகையாக உள்ளது.

தொடரும் ஆய்வுகள்
ஓமிக்ரான் குறைவான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதால் அதை லேசானது என நம்மால் கருத முடியாது. இன்னும் கூட உலகெங்கும் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் கணிசமான எண்ணிக்கையில் மருத்துவமனைகளில் அட்மிட் ஆகிறார்கள். அதேபோல உயிரிழப்புகளும் கணிசமாக ஏற்படுகிறது. இதை வெறும் ஜலதோஷம், காய்ச்சல் என நினைக் கூடாது. இப்போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 75 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்’ என்று அவர் தெரிவித்தார்.

பெ.சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்