ரஷ்யாவிலிருந்து வரும் எந்த எண்ணை கப்பலுக்கும் அமெரிக்க துறைமுகங்களில் அனுமதி கிடைக்காது-ஜோபைடன்

0
115
epa08707141 Democratic presidential candidate Joe Biden participates in the first 2020 presidential election debate at Samson Pavilion in Cleveland, Ohio, USA, 29 September 2020. The first presidential debate is co-hosted by Case Western Reserve University and the Cleveland Clinic. (Jim Lo Scalzo/EPA/CP)

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா படை எடுத்ததால், ரஷ்யாவிடமிருந்து பெட்ரோல் எரிவாயு போன்றவற்றை வாங்குவதில்லை என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த தடை முடிவுக்கு பல்வேறு ஐரோப்பிய கூட்டு நாடுகள் ஆதரவு அளிக்க முடியாத சூழலில் இருப்பதை நான் அறிவேன் என்றும் ஜோபைடன் தெரிவித்துள்ளார். வரலாற்றில் இல்லாத கடினமான பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த அறிவிப்பு ரஷ்யாவுக்கு மிகப்பெரிய பொருளாதார மையத்தின் மீது தாக்குதல் என்று அதிபர் ஜோ பைடன் கூறினார். அமெரிக்காவுக்கு உள்நாட்டில் பெட்ரோலிய பொருள்கள் விலை உயர்வு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு போன்ற சூழ்நிலையிலும் இந்த தடையை ஜோபைடன் அரசு அறிவித்துள்ளது.

இந்த தடை மூலம் ரஷ்யாவிலிருந்து வரும் எந்த எண்ணை கப்பலுக்கும் அமெரிக்க துறைமுகங்களில் அனுமதி கிடைக்காது. உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உடன் தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை நாங்கள் செய்கிறோம் என்று உறுதியளித்தார். இதுவரை உக்ரைனுக்கு ஒரு மில்லியன் டாலர் பாதுகாப்பு உதவிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் ஜோ பைடன் அவரது ட்விட்டர் கணக்கில் பதிவு செய்திருக்கிறார்.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்