வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை – உலக நாடுகள் கடும் கண்டனம்.

0
126

வடகொரியா மேலும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்தி இருப்பதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சர்வதேச விதிகளை மீறி வடகொரியா ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் வடகொரியாவின் கிழக்கு கடற்பகுதியில் அந்நாடு மீண்டும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்தியதாகவும் தென்கொரியா ஜப்பான் நாடுகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தொடர்ந்து அணு ஆயுதசோதனை நடத்தி வரும் வட கொரியாவிற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் சூழ்நிலையில் வடகொரியாவானது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு முறை ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்