எல்லாவற்றையும் டெல்லியிலிருந்து மேற்கொள்ள முடியாது – பிரதமர் நரேந்திர மோடி

0
37

நகர்ப்புற திட்டங்களை மாநில அளவில் பரவலாக்க வேண்டும் என மேயர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். செயற்கையாக நகரங்களை விரிவாக்குவதன் மூலம் நகரங்களின் மீதான அழுத்தம் குறையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் உள்ள மேயர்கள் கருத்தரங்கில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.

அப்போது இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையிலேயே நகர்ப்புற வளர்ச்சிக்கான திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் மாநில அளவில் பரவலாக்கப்பட்டால்தான் நகர்ப்புறங்களில் வளர்ச்சியை அதிகரிக்க முடியும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் எல்லாவற்றையும் டெல்லியிலிருந்து மேற்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார். மேயர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து அடிமட்டத்திலிருந்து பணியாற்ற வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்