மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் !

0
107

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு கோபுர வாசலில் எதிரே புது மண்டபம் அமைந்துள்ளது.புதுமண்டபத்தில் பல ஆண்டுகளாக கோவிலுக்கு தேவையான பூஜை பொருட்கள், புத்தகங்கள், பாத்திரங்கள், தையலகம் போன்ற பல்வேறு கடைகள் செயல்பட்டு வந்தது. புது மண்டபத்தில் உள்ள சிலைகள் சேதம் அடைவதாலும் பக்தர்கள் வழிபாடு செய்ய இடையூறாக இருப்பதினாலும் புதுமண்டபம் புதுப்பிப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் புதுப்பிக்கும் பணியும் துவங்க உள்ளதினாலும்கோவில் அருகே தற்போது புதியதாக கட்டப்பட்டுள்ள குன்னத்தூர் சத்திரத்திற்கு 300க்கும் மேற்பட்ட கடைகள் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டன.


இந்த நிலையில் புதுமண்டபத்தின் வெளிப்புறத்தில் மண்டபத்தை ஒட்டியவாறு 50க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமிக்கும் வண்ணம் செயல்பட்டு வந்தன. இந்த கடைகளை அகற்ற கோரி மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் அகற்றாமல் இருந்த கடைகளை தற்போது நிர்வாகமே கடைகளை அகற்றி வருகின்றனர்.


செய்தி,
ஆ.அருண்பாண்டியன்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்