மகாராஷ்டிரத்தில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான்

0
158

மகாராஷ்டிரத்தில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. அதில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு நிலவரம் பற்றி தரவுகளும் இடம்பெற்றுள்ளன.

இதன்படி, மாநிலத்தில் புதிதாக 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 7 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள். ஒருவர் வசை விராரைச் சேர்ந்தவர். மகாராஷ்டிரத்தில் இதுவரை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. இதில் 9 பேர் ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டவுடன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்.

புதிதாக பாதிப்புக்குள்ளான 8 பேரில் 3 பேர் பெண்கள், 5 பேர் ஆண்கள். இவர்களது மாதிரிகள் அனைத்தும் டிசம்பர் முதல் வாரத்தில் சேகரிக்கப்பட்டன. 3 பேருக்கு அறிகுறிகள் தென்படவில்லை. 5 பேருக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. முதற்கட்ட தகவலின்படி இவர்கள் அனைவரும் எவ்வித சர்வதேச பயணமும் மேற்கொள்ளவில்லை என்பது தெரியவந்துள்ளது. ஒருவர் பெங்களூருவுக்கும் மற்றொருவர் தில்லிக்கும் பயணம் மேற்கொண்டுள்ளனர். மும்பையில் பாதிக்கப்பட்ட ஒருவர் ராஜஸ்தானிலிருந்து திரும்பியவர்.

8 பேரில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் வீட்டுத் தனிமையில் உள்ளனர். இவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. இந்த 8 பேரில் 7 பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். ஒருவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்