ஒமைக்ரானை தொடர்கிறது புதிய வகை கோவிட் ‘டெல்டாக்ரான்’

0
102

உலகில் பல்வேறு நாடுகளிலும் பரவியுள்ள ஓமைக்ரானைத் தொடர்ந்து டெல்டாக்ரான் என்ற புதிய வகை கோவிட் சைப்ரஸ் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது, 2022ல் கோவிட் வைரஸின் மூன்றாவது அலையில் ‛ஒமைக்ரான்’ என்ற புதிய வகை கோவிட் பரவி வருகிறது.

இதன் பரவல் டெல்டா வகை கோவிட்டை காட்டிலும் வேகமாக இருந்தாலும் இதுவரை பாதிப்பு குறைந்த அளவே உள்ளது. சைப்ரஸ் நாட்டில் ‘டெல்டாக்ரான்’ என்ற புதிய வகை உருமாற்றம் அடைந்த கோவிட்டினை கண்டு பிடித்துள்ளனர்.

இது டெல்டா மரபு பின்னணியையும் ஒமைக்ரான் வகை கோவிட்டின் குணங்களை கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இருப்பினும் இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

டெல்டாக்ரானால் சைப்ரஸ் நாட்டில் இது வரை 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்