சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு : 29 பெண்களுக்கு ஜனாதிபதி நாரி சக்தி புரஸ்கார் விருதுகளை வழங்கினார்

0
142

மகளிர் தின வரலாறு

உலகமெங்கும் இனம், கலாசாரம், பொருளாதாரம், அரசியல் போன்ற வேறுபாடுகளை கடந்து தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற மகளிர் தின வரலாறு குறித்து காண்போம்.

பழங்காலத்தில் கிரேக்க நாட்டில் நடந்த போரை முடிவுக்கு கொண்டு வர பெண்கள் போராடினார்கள். பிரெஞ்சு புரட்சியின் போதும் ஆயிரக்கணக்கான பெண்கள் போராடினார்கள். அப்போது அவர்களுக்கு ஆதரவாக ஆண்களும் போராட உற்சாகம் களைகட்டி அரசரின் மாளிகை நோக்கி ஊர்வலம் சென்றது. அந்த ஊர்வலம் அரச மாளிகையை அடைந்தது. அங்கிருந்த மெய்க்காவலர்கள், நீங்கள் கலைந்து செல்லவில்லையென்றால் கைது செய்யப்படுவீர்கள் என்றனர். இதில் கோபம் கொண்ட போராட்டக்காரர்கள், மெய்க்காவலர்கள் இருவரை கொன்றனர். இதை அறிந்த அரசன் லூயிஸ் பிலிப் கொதித்தெழுந்தவர்களை சமாதானப்படுத்தினார். இறுதியில் ஆட்சியில் இருந்து இறக்கப்பட்டார்.

பெண்கள் ஒன்று கூடி போராடியதை அறிந்த ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க், இத்தாலியிலும் போராட்டங்கள் வெடித்தன. அதைத்தொடர்ந்து பிரான்சில் 2-வது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க் என்ற மன்னர் பெண்களை அரசவையின் ஆலோசனை குழுக்களில் இடம் பெறச்செய்து, பெண்களுக்கு ஓட்டளிக்கவும் ஒப்புதல் அளித்தார். அந்த நாள் மார்ச் 8-ந்தேதி ஆகும்.

இதுவே மகளிர் தினம் சர்வதேச அளவில் கொண்டாட காரணமாக அமைந்தது. அதன்பிறகு 1910-ல் 17 நாடுகளில் இருந்து வந்திருந்த பெண்கள் டென்மார்க் நாட்டின் கோபன்கேஹனில் ஒன்று கூடி பெண்கள் தினத்தை சர்வதேச அளவில் கொண்டாட முடிவு செய்தனர். அதன்படியே உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.


29 பெண்களுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருதுகள்

இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 2020, 2021-ம் ஆண்டுகளுக்கான பெண் சக்தி விருதுகளை (நாரி சக்தி புரஸ்கார்) 29 பெண்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்குகிறார். இந்த விருது பெறும் பெண்களுடன் பிரதமர் நரேந்திர மோடியும் உரையாடுவார். தொழில்துறை, விவசாயம், கண்டுபிடிப்பு, சமூகப்பணி, கல்வி, கலை, இலக்கியம், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் அசாதாரண பங்களிப்பை அளித்த பெண்களையும், நிறுவனங்களையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது.

சமூக தொழில்முனைவாளர் அனிதா குப்தா, பழங்குடியின செயல்பாட்டாளர் உஷாபென் தினேஷ்பாய் வாசவா, கண்டுபிடிப்பாளர் நசிரா அக்தர், இன்டெல்-இந்தியா நிறுவன தலைமை நிர்வாகி நிவ்ருதி ராய் உள்ளிட்டோர் பெண் சக்தி விருது பெறுகிறார்கள்.

பெ. சூர்யா, நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்