பரமக்குடி: இமானுவேல் சேகரனார் 65-வது நினைவு தினத்தையொட்டி, பாஜக சார்பில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது!

0
53

யார் இந்த இமானுவேல் சேகரன்?

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் செல்லூர் எனும் கிராமத்தில் 1924ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி அன்று பள்ளி ஆசிரியரான வேதநாயகம் – ஞானசவுந்தரி ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார் இம்மானுவேல் சேகரன். இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுக்கத் துவங்கினார் அவர். 1942 ஆம் ஆண்டில் இம்மானுவேல் சேகரன் தனது 18வது வயதில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கெடுத்து, மூன்று மாத சிறைத் தண்டனை அனுபவித்தார். சிறை வாழ்க்கைக்குப் பிறகு பள்ளியில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

நாட்டின் மீது கொண்ட பற்றினால் இம்மானுவேல் சேகரன் 1945இல் இராணுவத்தில் இணைந்தார். பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் மூன்று ஆண்டுகளும், சுதந்திர இந்திய இராணுவத்தில் ஐந்து ஆண்டுகளும் பணியாற்றினார். ராமநாதபுரம் பகுதி வாழ் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்நிலையைக் கருத்தில் கொண்டு தனது ராணுவப் பணியை 1952இல் துறந்தார். நேரடியான சமூகப் போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

பல்வேறு சமுக மக்களின் பிரச்சினைகளை களைய முற்பட்டார் ‘ குரலற்றவர்களின் குரலானார் ” ஆண்டுதோறும் இவருடைய நினைவுநாளை தமிழக மக்கள் குருபூஜையாக கொண்டாடி வருகின்றனர்.

பாஜக சார்பில் புகழ் அஞ்சலி செலுத்தப்பட்டது:

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த இமானுவேல் சேகரனாரின்
நினைவு தினத்தில் சமூகநீதி மற்றும் சம உரிமைக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்களை நினைவில் கொள்வோம்.திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவருமான நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்- ராம ஸ்ரீநிவாசன்!

மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் கலந்துக் கொண்டு மரியாதை செலுத்திய பிறகு தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

எஸ்.சி. பிரிவில் இருந்து நீக்குங்க – காயத்ரி ரகுராம் !

நடிகையும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தில் அவரை நினைவு கூர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார், மேலும் அவர் சார்ந்த தேவேந்திரகுலவேளாளர் சமூகத்தை எஸ்சி பிரிவில் இருந்து நீக்கி ஓபிசி பிரிவில் சேர்க்க முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.


பரமக்குடியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சயில் திருநெல்வேலி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் முத்துபலவேசம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ஆர். சித்ராங்கதன், முன்னாள் எம்.எல்.ஏவும் கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் சோழவந்தான் மாணிக்கம், கூட்டுறவு பிரிவு மாநில துணைத் தலைவர் அருமைத்துரை மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு வீரவணக்க மலரஞ்சலியை செலுத்தினார்கள்.!


செய்தி,

ஆ.அருண்பாண்டியன்

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்