திருநெல்வேலியிலிருந்து பழனி, பொள்ளாச்சி,கோவை வழியாக மேட்டுப்பாளையத்திற்கு புதிய ரயில் விட பயணிகள் கோரிக்கை

0
350

நாகர்கோவிலிருந்து நெல்லை வழியாக தினந்தோறும் இரவு நேரத்தில் கோயம்புத்தூருக்கு ஏற்கனவே ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது,

இந்த ரயில் மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் வழியாக கோவைக்கு இயக்கப்பட்டு வருகின்றது. தற்போது கோயம்புத்தூரிலிருந்து போத்தனூர் ,பொள்ளாச்சி வழியாக திண்டுக்கல் வரை மீட்டர்கேஜ் பாதை அகலரயில் பாதையாக மாற்றி மின்மயமாக்கலுடன் கூடிய பாதை நிறைவு பெற்று சோதனை ஓட்டமும் நிறைவு பெற்றுள்ளது

எனவே திருநெல்வேலியிலிருந்து திண்டுக்கல், பழனி பொள்ளாச்சி,போத்தனூர் , கோயம்புத்தூர் வழியாக மேட்டுப்பாளையத்திற்கு தாற்போதிருக்கும் பகல்நேர அல்லது இரவுநேர புதிய ரயில் விடவேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தப்புதிய ரயில் மூலம் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்வதற்கு பயணிகளுக்கு மிக எளிதாகவிருக்கும் அதோடு சுற்றுலா தளங்களும் மேம்படும் எனவே தென்னக ரயில்வே இதில் கவனம் செலுத்துமா

செய்திகள்

திரு விஜயன்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்