நகராட்சித் துணைத் தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

0
122

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சித் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளர் வீட்டில் மர்ப நபர்கள் பெட்ரோல் குண்டை வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராம லோக ஈஸ்வரி என்பவர் திருத்துறைப்பூண்டி 11 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திருத்துறைப்பூண்டி நகராட்சி துணைத் தலைவர் பதவிக்கு ராம லோக ஈஸ்வரி போட்டியிடுவார் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இன்று அவர் பதவியேற்கவுள்ள நிலையில் அதிகாலையில் அவர் வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

தமிழ்,
நெல்லை.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்