பள்ளி சுவர் இடிந்து உயிரழந்த மாணவர்கள் உடல் ஒப்படைப்பு

0
178

அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் தலைமையாசிரியர் தாளாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த நிலையில் மூன்று மாணவர்களின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அவர்களது பெற்றோர்களிடம் தமிழக அரசின் பொதுநிவாரண நிதியிலிருந்து தலா ரூபாய் 10 லட்சம் வழங்கப்பட்டது.

நெல்லை சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை சுற்றுசுவர் இடிந்து விழுந்த விபத்தில் இறந்து போன மாணவர்கள் 9ஆம் வகுப்பு மாணவர் அன்பழகன்,8ஆம் வகுப்பு மாணவர் விஸ்வ ரஞ்சன்,6ஆம் வகுப்பு மாணவர் சதீஸ் ஆகியோரின் பூத உடலுக்கு மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் திரு மு.அப்பாவு அவர்கள்,மாண்புமிகு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் திரு ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர் ஆற்றல் அரசர் திருமிகு மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ அவர்கள், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு வே.விஷ்ணு இ.ஆ.ப., அவர்கள், மாநகர கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு ஏ.எல்.எஸ்.லெட்சுமணன் அவர்கள்,உள்ளிட்டோர் திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட தலா ரூபாய் 10இலட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்